உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

கரூர்: கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குடும்ப நல செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்-தது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்பு-ணர்வு பேரணியை, கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் மக்கள் தொகை கட்டுபடுத்துவதன் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர். நிறைவாக, பேரணி கரூர் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நிறைவு பெற்-றது. பேரணியில் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜா, மருத்-துவ பணிகள் இணை இயக்குனர் சுதர்சனா ஜேசுதாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் சுபிலா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை