மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
16 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
16 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
16 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
16 hour(s) ago
கிருஷ்ணகிரி, -கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருடு போன மொபைல் போன்களை கண்டுபிடிக்க, எஸ்.பி., தங்கதுரை உத்தரவுப்படி, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., சங்கு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசாரின் தீவிர நடவடிக்கையால், திருடு போன, 7.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து மீட்டனர். இந்த மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. மொபைல் போன்களை உரியவர்களிடம் எஸ்.பி., தங்கதுரை வழங்கி பேசியதாவது:மொபைல் போன் தொலைந்தாலோ, பறித்து சென்று விட்டாலோ உடனடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது மாவட்ட எஸ்.பி., அலுவலத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்க வேண்டும். தொலைந்து போன மொபைல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.inஎன்ற வலைதளத்திலும், சைபர் குற்றங்களில் பொதுமக்கள் பணத்தை இழந்தால் உடனடியாக, 1930 என்ற எண்ணில் (Toll Free) புகாரளிக்க வேண்டும். மேலும், வேறு சைபர்கிரைம் தொடர்பான புகார்களுக்கு, www.cybercrime.gov.inஎன்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago