உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் மேலும் 10 பேருக்கு வாந்தி: அதிகாரிகள் ஆய்வு

ஓசூரில் மேலும் 10 பேருக்கு வாந்தி: அதிகாரிகள் ஆய்வு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட சின்ன எலசகிரி அம்பேத்கர் நகர், சின்ன பழனியப்பா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த, 65 பேர் இரு நாட்களாக வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாநகராட்சி வினியோகம் செய்த குடிநீரில், கழிவுநீர் கலந்ததால் தான் மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று, மூன்றாவது நாளாக, அம்பேத்கர் நகர், சின்ன பழனியப்பா நகரைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கால், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்த, 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வையாவூர் ஊராட்சி காலனி பகுதியில், திறந்தவெளி கிணற்றிலிருந்து வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட குடிநீரில் ஏற்பட்ட தொற்று காரணமாக, கிராமவாசிகள் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில், அசுவணி, 91, மற்றும் சரோஜா, 80, ஆகிய இரு மூதாட்டிகள் இறந்தனர்.அதனால் தற்காலிகமாக காஞ்சிபுரம் மாநகராட்சியிலிருந்து டேங்கர் லாரியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் கூறுகையில், ''ஊராட்சியில் குடிநீர் தொட்டி அருகே பழுதாகி இருந்த குழாயை மாற்றி அமைத்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை