உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.15.20 லட்சம் மோசடி

மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.15.20 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி திம்மராயன் தெருவைச் சேர்ந்தவர் விஜய்சங்கர்; தனியார் நிறுவன ஊழியர்.கடந்த ஜூலை 31ல் இவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்தார். மேலும், 'உங்களின் மொபைல் போன் எண், சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உங்கள் மீது வழக்கு பதிய உள்ளோம். அதைத் தவிர்க்க, 20 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என கூறினார். அதிர்ச்சி அடைந்த விஜய்சங்கர், தன் வங்கிக் கணக்கில் இருந்து, 15.20 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் எந்த அழைப்பும் வரவில்லை.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜய்சங்கர் அளித்த புகாரின்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை