உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் 2வது நாளாக மழை

கிருஷ்ணகிரியில் 2வது நாளாக மழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நீர்நிலைகள் வறண்டு, தென்னை, மா மாரங்கள் காய்ந்தன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக கிருஷ்ணகிரியில் நேற்று இரண்டாவது நாளாக பகல், 1:00 மணிக்கு அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின் மாலை வரை சாரல் மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனஹள்ளி, நாரலப்பள்ளி, சூளகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலும் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை