உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விமான நிலையம்: ஓசூரில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

விமான நிலையம்: ஓசூரில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

ஓசூர், ஓசூரில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.இதையடுத்து ஓசூர் மாநகர, தி.மு.க., செயலாளரும் மேயருமான சத்யா தலைமையில், தி.மு.க.,வினர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அவைத்தலைவர் யுவராஜ், பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, ஓசூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாநகர அவைத்தலைவர் செந்தில், பகுதி செயலாளர் ராமு உள்பட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி