உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பொக்லைன் உயிர் தப்பிய டிரைவர், உதவியாளர்

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பொக்லைன் உயிர் தப்பிய டிரைவர், உதவியாளர்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மன்னாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், கிணற்றின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு பணி நடந்தது.அப்போது எதிர்பாராத விதமாக, 60 அடி ஆழ விவசாய கிணற்றில் பொக்லைன் விழுந்தது. டிரைவரான ஜோதி நகர் கிராமத்தை சேர்ந்த பிரதாப், 29, அதே கிராமத்தை சேர்ந்த உதவியாளர் பாலமுருகன், 19, ஆகிய இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். கிணற்றில், 10 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால், இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் பாலமுருகனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.அருகில் இருந்தவர்கள், கிணற்றில் இறங்கி இருவரையும் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும் பின், மேல் சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை