உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பக்தர்களுக்கு முறம், துடைப்பம் அடி: கோயில் விழாவில் நுாதன ஆசிர்வாதம்

பக்தர்களுக்கு முறம், துடைப்பம் அடி: கோயில் விழாவில் நுாதன ஆசிர்வாதம்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் பகுதியில், திரவுபதி தர்மராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. இதில், முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம், முறம், துடைப்பத்தால் பக்தர்களை பூசாரி அடித்து ஆசி வழங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.காளி வேடமிட்ட கோவில் பூசாரி, பலியிட்ட ஆடு, கோழி தலையை வாயில் கடித்துக் கொண்டு, பக்தர்களை முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்து ஆசி வழங்கினார். இந்த முறம் மற்றும் துடைப்பம், கரகதம்மா கோவிலில் பயன்படுத்தப்பட்டதாகும். இவ்வாறு செய்வதால் நோய் நொடி, பில்லி, சூனியம் நீங்குவதாக பக்தர்கள் தெரிவித்தனர். திருவிழாவில் பாண்டவர்களின் நாடக நிகழ்ச்சி, 18 நாட்கள் தொடர்ந்து நடந்தது. விழாவில் பலியிடப்பட்ட ஆடு, கோழிகள் பக்தர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி