| ADDED : மே 19, 2024 02:53 AM
தொப்பூர்: கரூர் மாவட்டம், வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன், 22; இவர் நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து, சேலம் நோக்கி மாருதி ஸ்விப்ட் டிஷைர் காரை ஓட்டி வந்தார். கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நல்லம்பள்ளி அடுத்த தொம்பரகாம்பட்டி பகுதியில் சென்றபோது, முன்னாள் சென்ற ஆட்டோ மீது, மோதிவிட்டு நிற்காமல் சென்றது. தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை, பாளையம் சுங்கசாவடி பகுதியில் பிடித்து சோதனை செய்தனர்.அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 400 கிலோ எடை கொண்ட, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை தொடர்ந்து, ஓட்டுனரிடம் விசாரித்ததில் பெங்களூரில் இருந்து கரூருக்கு குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, குபேந்திரனை கைது செய்து குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.