உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்கம்பியை தொட்ட மக்னா யானை பலி

மின்கம்பியை தொட்ட மக்னா யானை பலி

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டம் அய்யூர் வனப்பகுதியில் இருந்து, நேற்று அதிகாலை, 25 வயது மதிக்கத்தக்க, 'மக்னா' யானை, சந்தனப்பள்ளியில் உள்ள பொன்னியம்மன் ஏரிக்கு வந்தது. அங்கிருந்த மின் கம்பத்திலிருந்து தாழ்வாக சென்ற கம்பியை, துதிக்கையால் யானை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் உள்ளிட்ட வனத்துறையினர், யானை உடலை மீட்டு விசாரித்தனர்.சுற்றுப்புற கிராம மக்கள், ஏரியில் திரண்டு, இறந்த யானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கினர். அங்கு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், தேன்கனிக்கோட்டை போலீசார் லேசான தடியடி நடத்தினர்.ஆத்திரமடைந்த மக்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின் போலீசார், மக்களை சமாதானப்படுத்தினர். கால்நடை மருத்துவக்குழுவினர், யானை உடலை பிரேத பரிசோதனை செய்த பின், ஏரியில் புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ