உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த பெல்லட்டி அருகே கோவைப்பள்ளம் வனப்பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை வனப்பகுதியில் ரோந்து சென்ற வனக்காவலர் சதீஷ்குமார், 47, நேற்று முன்தினம் பார்த்து, அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வனப்பகுதிக்குள் சடலமாக வீசப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை