உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.8.75 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.8.75 லட்சம் பறிமுதல்

ஓசூர்:தளி, வேப்பனஹள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக, 8.75 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே மதகொண்டப்பள்ளி மற்றும் கலகோபசந்திரம் பகுதியில் பறக்கும் படையினர் நேற்று முன் தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த இரு வாகனங்களை சோதனை செய்தபோது, ஒண்டூரை சேர்ந்த சிவா, 2.44 லட்சம் ரூபாய், குந்துக்கோட்டை மாதேவப்பா, 2.49 லட்சம் ரூபாய் கொண்டு சென்றனர். உரிய ஆவணம் இல்லாததால், அப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.அலேசீபம் மற்றும் வேப்பனஹள்ளி சோதனைச்சாவடியில் இரு வாகனங்களை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில், தர்மபுரி மாவட்டம், மதிகோன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், 98,800 ரூபாய், குறியனப்பள்ளி கோவிந்தன், 39, ஒரு லட்சம் ரூபாய் கொண்டு சென்றனர். அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாததால், அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.ஊத்தங்கரை அடுத்த, குரங்கு கல்மேடு பகுதியில், தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சாந்தகுமாரி தலைமையில் அதிகாரிகள், அந்த வழியாக வந்த மினி வேனை சோதனை நடத்தினர். அதில் ஊத்தங்கரை அடுத்த, கெடக்கானுார் ஆடு வியாபாரி சங்கர், 44, ஆவணமின்றி, 1.29 லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை பறிமுதல் செய்தனர்.வெள்ளக்குட்டையில் சுற்றுலா சென்ற, ஓசூர் தனியார் பள்ளி நிர்வாகி தீபா, 36, என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 54,500 ரூபாய் இருந்ததை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி