உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

கிருஷ்ணகிரி: ஆடி மாத பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.ஆடி மாதத்தில், அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் என இம்மாதம் முழு-வதும் அம்மனை வேண்டி வழிபடுவர். ஆடி மாதம் நேற்று பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்-திலுள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.அதன்படி, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில், அவதா-னப்பட்டி மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், ஜோதி விநாயகர் தெருவிலுள்ள முத்து மாரியம்மன் கோவில், பழையபேட்டை சமயபுரம் மாரியம்மன் கோவில் உட்-பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ