கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர் மத்திகிரி, கந்திகுப்பம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற, கிருஷ்ணகிரி அன்வர் பாஷா, 45, மத்திகிரி வெங்கடேசன், 36, உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1,700 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல லாட்டரி சீட்டுகள் விற்ற கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், பர்கூர், பாரூர் பகுதிகளில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற கிருஷ்ணகிரி லியாகத்அலி, 35, வேப்பனஹள்ளி முருகன், 37 உள்பட, 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1,250 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டன.