உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 வழக்கு பதிவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 வழக்கு பதிவு

ஓசூர்:ஓசூர், அரசனட்டி சாலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, தே.மு.தி.க.,வின் முரசு சின்னம் வரையப்பட்டுள்ளதாக, மூக்கண்டப்பள்ளி வி.ஏ.ஓ., விவேக் சர்மா, சிப்காட் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்த, தே.மு.தி.க., நிர்வாகி முருகன், 45, மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அதேபோல், மூக்கண்டப்பள்ளி தொப்பம்மா கோவில் அருகே, தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாக, வி.ஏ.ஓ., விவேக் சர்மா புகார்படி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழன் மாயக்கண்ணன், 43, என்பவர் மீது சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை