உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டட சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

கட்டட சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கட்டட சுவரை இடிக்கும் பணியின் போது, சுவர் இடிந்து விழுந்ததில், 2 தொழிலாளர்கள் பலியாகினர்.கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.பள்ளியில் ஊருக்கு பொதுவான இடத்தில் பழமையான கட்டடம் உள்ளது. அதை இடித்து புதிய கட்டடம் கட்ட, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இப்ப-ணியில் நேற்று எம்.சி.பள்ளி காலனியை சேர்ந்த கட்டட தொழி-லாளர்கள் அண்ணாமலை, 65, ரவி 51, ஆகியோர் ஈடுபட்டிருந்-தனர். மாலை, 4:30 மணியளவில் கட்டடத்தின் அடிப்பகுதியில் கடப்பாரையால் இடிக்கும் போது சுவர் இடிந்து, அவர்கள் இருவர் மீதும் விழுந்தது. அக்கம் பக்கத்தினர் வந்து, இடிபாடு-களில் சிக்கிய அவர்களை மீட்பதற்குள் இருவரும் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை மற்றும் மகாராஜகடை போலீசார் சம்பவ இடம் சென்று சடலங்களை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை