உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து சுற்றுலா சென்ற 22 பேர் காயம்

பர்கூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து சுற்றுலா சென்ற 22 பேர் காயம்

கிருஷ்ணகிரி : சென்னையில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற, மினி பஸ் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், 22 பேர் படுகாயமடைந்தனர்.சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் சாகுல்ஹமீத், 54; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் அவரின் குடும்பத்தினர், 13 பெண்கள் உட்பட, 22 பேருடன், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு மினி பஸ்சில் சுற்றுலா புறப்பட்டார். மினிபஸ்சை திருவள்ளூர் மாவட்டம், அத்தியால்பேட்டையை சேர்ந்த கரீமுல்லா, 48, ஓட்டினார்.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பொறியியல் கல்லுாரி அருகே சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ்சின் முன் மற்றும் மேல் பகுதி நசுங்கியது. கந்திக்குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதியினர் மினிபஸ் இடிபாடுகளில் சிக்கிய, 22 பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதில், டிரைவர் கரீமுல்லா, சாகுல்ஹமீத், மொய்தீன் அப்துல்காதர், 53, மர்ஜியா, 48, குர்ஷித், 48, நஜீம் மணிஷா, 50, ஜலாலுதீன், 65, ஜெரின், 45, அப்ரோஸ், 19, பர்ஜானா, 30, பிர்தோஸ், 23, ரஷீதா, 45, தவுபீக், 16, நாசீலாமக்ரம், 17, சித்திக்பாத்திமா, 45, பல்கீஸ், 15, உள்ளிட்ட, 16 பேர் படுகாயங்களுடனும், 6 பேர் லேசான காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.டிரைவர் கரீமுல்லா, ஆம்பூரை கடந்தது முதலே, துாங்கியபடி பஸ்சை ஓட்டியுள்ளார். அதனால், டிரைவருக்கு டீ வாங்கி கொடுத்து, சிறிது நேரம் ஓய்வெடுங்க கூறியுள்ளனர். அதை கேட்காத அவர், துாங்கிய படி பஸ்சை ஓட்டியதால் தான் விபத்து நடந்ததாக போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை