உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தளி அருகே ரவுடி கொலையில் 5 பேர் கைது; ஒருவருக்கு வலை

தளி அருகே ரவுடி கொலையில் 5 பேர் கைது; ஒருவருக்கு வலை

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த குனிக்கல்லை சேர்ந்த ரவுடி சதீஷ், 31; இவர் மீது, 2018ல் நடந்த உமேஷ் கொலை வழக்கு, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு என ஏழு வழக்குகள் உள்ளன. கடந்த, 26ம் தேதி இரவு தளியில் ஜெயந்தி காலனி பகுதியில் கொலை செய்யப்பட்டார். தளி போலீசார் விசாரணையில், தேன்கனிக்கோட்டை அடுத்த பெல்லுார் மஞ்சு, 28, சங்கேப்பள்ளி திலீப்குமார், 28, சானபோகனப்பள்ளி பரத், 24, சாமநத்தம் சிவா, 26, பெல்லுார் சேத்தன், 20, தளி ஜெயந்தி காலனி ஆசிக், 24, ஆகியோர், கொலை செய்தது தெரிந்தது. இதில் மஞ்சு, திலீப்குமார், பரத், சிவாவை போலீசார் நேற்று கைது செய்தனர். சேத்தன், ஆசிக்கை தேடி வந்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலையான சதீஷ், கணவரை இழந்த பவித்ரா, 27, என்பவரை, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். அவருக்கு ஏழு வயதில் மகள் உள்ளார். கர்நாடகா மாநிலம் ஆனைக்கல், விஸ்வேஸ்வர படவனே பகுதியில் குடும்பத்துடன் சதீஷ் வசித்தார். 10 நாட்களுக்கு முன், குனிக்கல்லில் நடந்த கோவில் விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் வந்திருந்தார். கடந்த, 26ம் தேதி மாலை மதகொண்டப்பள்ளியில் டாஸ்மாக் கடையில், நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது அவருக்கும், அவரது நண்பர்களான பெல்லுார் மஞ்சு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அன்றிரவே பெல்லுார் மஞ்சு தரப்பினர், சதீஷை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இவ்வாறு போலீசார் கூறினர். தலைமறைவாக இருந்த தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த ஆசிக், 25, என்பவரை, நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். சேத்தன் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை