கிருஷ்ணகிரி, நகிருஷ்ணகிரி, செந்தில் பப்ளிக் பள்ளியில், 3 முதல், 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கலைவிழா நேற்று நடந்தது. செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் பேசினார். இதில், முதன்மை நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், தலைமை நிர்வாக அதிகாரி மாதையன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் வேங்கட அழகிரி, பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவில், பல்வேறு போட்டிகள் மற்றும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான சதுரங்கம், கராத்தே, ஸ்கேட்டிங், பரத நாட்டிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிறுத்தும் வகையில், இந்த கலைவிழா நடந்தது.