உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம்: 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம்: 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர் : மதகொண்டப்பள்ளி பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டத்தில், 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே மதகொண்டப்பள்ளி பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாடுகள் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 16 மாலை, 4:30 மணிக்கு ரத சப்தமி உற்சவம், 17 முதல், நேற்று முன்தினம் வரை, பல்வேறு வாகன உற்சவமும், நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு கல்யாண உற்சவம், கருடோத்சவம், உரடோற்சவம், கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம் தேரோட்டம் நடந்தது.தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உற்சவ மூர்த்திகளுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, மாட்டு சந்தையும் நடந்தது. மதகொண்டப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாடுகள் வந்திருந்தன. ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து, பல லட்சம் ரூபாய்க்கு மாடுகளை வாங்கி சென்றனர். இன்று (பிப்.25) பல்லக்கு உற்சவம் நடக்கிறது. வரும், 2 ல் வசந்த உற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை