உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவியருக்கு சி.இ.ஓ., பாராட்டு

மாணவியருக்கு சி.இ.ஓ., பாராட்டு

கிருஷ்ணகிரி:பள்ளிக்கல்வித்துறை சார்பில், இந்த கல்வியாண்டில் நடந்த, 14 வயது கோ-கோ பிரிவில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மாநில அளவில், 3ம் இடத்தையும், 17 வயது பிரிவில், 2ம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும், சிலம்பம், ஜூடோ, டேக்வோண்டா, நீச்சல், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டில், மாநில அளவிலான, சிலம்பம் போட்டியில், 2ம் இடமும், ஜூடோவில், 2 பிரிவுகளில் மாநில அளவில், 3ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய போட்டிகளில், 14 வயது பிரிவில் மாணவியர் மோனிகா, ஹரிதா ஆகியோரும், 17 வயது பிரிவில் பத்மா, குமாரிகாவியா ஆகியோரும், தேசிய அளவில் நாசிக்கில் நடந்த கோ-கோ போட்டியிலும் கலந்து கொண்டனர். இந்தாண்டு, 9ம் வகுப்பு மாணவி ஹரிதா, மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்வு பெற்று, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரால் பாராட்டப் பட்டார். இவ்வாறு, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவியரை, நேற்று சி.இ.ஓ., மகேஸ்வரி பாராட்டி சான்றுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் மகேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை