உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சப்பளம்மா கோவில் மாடுகள் திருவிழா; ஜன., 16ல் துவங்க தேதி குறிப்பு

சப்பளம்மா கோவில் மாடுகள் திருவிழா; ஜன., 16ல் துவங்க தேதி குறிப்பு

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணை அருகே, சப்ப-ளம்மா கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் அம்மன், கால்நடைகளை பாதுகாத்து, மக்களை நோய், நொடியின்றி காப்பாற்றும் தெய்வமாக அருள்பாலிக்கிறார். கிராம தேவதை சப்பளம்மா கோவில் மாடுகள் திருவிழா, ஆண்டுதோறும் ஜன., மாதம் நடப்பது வழக்கம். அப்போது, பல்வேறு கிராமங்களிலிருந்து விவ-சாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். அதை வாங்க, ஆந்திரா, கர்நாடகா உட்-பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருவர். இதையொட்டி வரும், 2026ம் ஆண்டுக்-கான திருவிழா நடத்துவது குறித்த கூட்டம், சப்ப-ளம்மா கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. சப்பளம்மா கோவில் கமிட்டி சார்பில், முக்கிய நிர்வாகிகள் கலந்து பேசி ஆலோசித்தனர். இதில், வரும் ஜனவரி, 16ம் தேதி சப்பளம்மா கோவில் திருவிழாவை பூஜையுடன் துவங்கி, 25ம் தேதி வரை நடத்துவது என, முடிவு செய்து தேதி குறிக்-கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை