கிருஷ்ணகிரி-தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை கலெக்டர் பாராட்டினார்.தமிழ்நாடு தேக்வாண்டோ கழகம் சார்பில், சேலம் காந்தி விளையாட்டு அரங்கில், 2024ம் ஆண்டிற்கான, 3வது நேஷனல் ஓபன் தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி கடந்த, 20 முதல், 23 வரை நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு விளையாட்டு விடுதியில் இருந்து, 16 மாணவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 8 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.இதில், விடுதி மாணவர்கள் விக்னேஷ், முகுந்தன், சந்தோஷ், அஸ்வின் ஆகியோரும், மற்ற மாணவ, மாணவிகள் முத்துகண்ணன், ஸ்ரீதயா ஆகிய, 6 பேர் தங்கப்பதக்கம், மதன், பேரரசு, பிரணவராஜ், விஷ்ணு மற்றும் ஜெர்ஷினி, ஸ்ரீஹரிப்பிரியா ஆகிய, 6 பேர் வெள்ளி பதக்கம், பிரனேஷ், திவாகர், அனிஷ், கீர்த்தி, நிதிக்ரோஷன் மற்றும் நிதின், ஷவித்தா, மோஷித்தா ஸ்ரீ ஆகிய, 8 பேர் வெண்கல பதக்கம் வென்றனர்.பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் கலெக்டர் சரயுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், பயிற்சியாளர் சங்கர் உடன் இருந்தனர்.