உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.50 கோடியில் பாரா விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் துவக்கம்

ரூ.1.50 கோடியில் பாரா விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் துவக்கம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாரா விளையாட்டு அரங்க கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் பணிகளை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து நிருபர்களிடம் கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், 2 த்ரோபால் மைதானம் மற்றும் போஷிகா விளையாட்டு மைதானம், கோல்பந்து விளையாட்டு மைதானம், பாரா திரோபால் மைதானம், சிறிய உடற்பயிற்சி கூடம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய, 30 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம் கொண்ட புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அரசு பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியருக்கு, சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க்குகளை மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.கிருஷ்ணகிரி நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை