ஓசூர்: ஓசூரில் அ.தி.மு.க., நிர்வாகி கார் டிரைவர் கொலையில், தோண்ட, தோண்ட பல்வேறு புதிய தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே மாரச்சந்திரத்தை சேர்ந்-தவர் ஹரீஸ், 32; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் பிரசாந்த்தின் கார் டிரைவர். கடந்த, 2ம் தேதி இரவு கூலிப்படையால் கொலை செய்யப்-பட்டார். இதில் அவரது கள்ளக்காதலியான மஞ்-சுளா, 35, மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு-வரை ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஹரீஸ் கொலையில், பல்வேறு தகவல் தினமும் கிடைத்தபடி உள்ளது, போலீ-சாரை ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த ஜன., மாதம், குடிபோதையில் இருந்த இரு வாலிபர்கள், ஹரீசை கத்தியால் குத்தினர். இதில் மார்பு பகுதியில் படுகாயமடைந்த ஹரீஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதற்-கான பணத்தை கள்ளக்காதலி மஞ்சுளா தான் கொடுத்துள்ளார். ஆனால், மஞ்சுளாவை திரு-மணம் செய்ய, ஹரீஸ் தயாராக இல்லை. தன்னை திருமணம் செய்யா விட்டாலும் சரி, வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு, தன்னை விட்டு விடும்படி கேட்டும் ஹரீஸ் அதற்கும் தயாராக இல்லை. தினமும், 2,000 ரூபாய் தனக்கு வேண்டும். விபசார தொழிலை மீண்டும் செய்யுமாறு மஞ்சுளாவை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஹரீசை தீர்த்து கட்ட முடிவு செய்து, தனக்கு பழக்கமான மோனீஸ் என்பவரை தொடர்பு கொண்டார். ஏற்கனவே ஹரீசை இருவர் கத்தியால் குத்தியதை மோனீசிடம் கூறிய மஞ்சுளா, அந்த இரு வாலிபர்கள் மூலமா-கவே, ஹரீசை தீர்த்து கட்ட ஆலோசனை கொடுத்துள்ளார். அவர்களை மறுத்து விட்டு இந்த தகவலை ஹரீசிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஹரீஸ் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மோனீஸ், வாலிபர்கள் சிலரை கூட்டு சேர்த்துக்-கொண்டு ஹரீசை கொலை செய்தார். கடந்த, 2021 முதல் மஞ்சுளாவுக்கும் மோனீ-ஸுக்கும் பழக்கம். மஞ்சுளா உடல்நிலை சரி-யில்லாமல் இருந்தபோது, கோரோசனையை (பசுவின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் ஒரு வித மஞ்சள் நிற பொருள்) கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதனால் இருவருக்குமான பழக்கம், நெருக்கமாகி கொலை வரை சென்று-விட்டது. இவ்வாறு போலீசார் கூறினர்.