உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டில்லி விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம்

டில்லி விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம்

கிருஷ்ணகிரி, டில்லி விவசாயிகளின் போராட்டத்தில் ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர்கள் சிவராஜ், முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணு உள்பட பலர் பங்கேற்றனர்.தர்ணா போராட்டத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் மற்றும், 50 சதவீத அடிப்படையில் விலை நிர்ணயம், சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்தி, அரசாங்க கொள்முதல் மையங்கள் அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை