உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழை வேண்டி கோவிலில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

மழை வேண்டி கோவிலில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

ஓசூர் : ஓசூர், 29 வது வார்டு, நஞ்சுண்டேஸ்வர நகரிலுள்ள மகாலட்சுமி கோவிலில், -ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க தலைவர் துரை தலைமையில், மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. நகரிலுள்ள பெண்கள் தங்கள் இல்லங்களில் இருந்து ஊர்வலமாக தண்ணீர் எடுத்து வந்து, மகாலட்சுமி கோவிலில் அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை நகர் நிர்வாகிகள் மோகன்ராஜ், வின்சென்ட், மகாதேவன், கிருஷ்ணன், ராஜேந்திரன், ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி