உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அங்காள பரமேஸ்வரி கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

அங்காள பரமேஸ்வரி கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளைத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு, 8:00 மணிக்கு அக்னி குண்டம் தீமிதி விழா நடந்தது. இதில், மயானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவரை சுமந்து வந்த பூசாரிகள் மற்றும் பூங்கரகம் சுமந்து வந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்டவர்கள் காளி மற்றும் அம்மன் வேடம் அணிந்து குண்டத்தில் இறங்கினர். இன்று பகல், 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம், அன்னதானம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு அம்மையப்பன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை