உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்கள் வழங்கல்

ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய்பிரியா முன்னிலை வகித்தார். இதில், நீதிமன்ற ஊழியர்கள், 22 பேருக்கு, ஓட்டுனர் பழகுனர் உரிமம் வழங்கி, புதியதாக பழகுனர் உரிமம் எடுத்த பெண் ஊழியர்களுக்கு, ரோஜா பூங்கொத்து மற்றும் ஆண் ஊழியர்களுக்கு பேனா ஆகியவற்றையும், டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கி, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி