உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனைவியுடன் கள்ளத்தொடர்பு; நண்பரை கொன்ற டிரைவர் கைது

மனைவியுடன் கள்ளத்தொடர்பு; நண்பரை கொன்ற டிரைவர் கைது

போச்சம்பள்ளி, : கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்தவர் முரளி, 29; லாரி டிரைவர். இவர் மனைவி வடிவரசி. போச்சம்பள்ளி, பனங்காட்டூர் அடுத்த செட்டியூரை சேர்ந்தவர் சேது, 30; தனியார் பள்ளி பஸ் ‍டிரைவரான இவருக்கும், முரளிக்கும், சில மாதங்களுக்கு முன் நட்பு ஏற்பட்டது.எச்சரித்தார்முரளி வீட்டிற்கு, சேது அடிக்கடி வந்து சென்றதில், முரளியின் மனைவி வடிவரசிக்கும், சேதுவிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது.முரளி எச்சரித்தும், இருவரும் கள்ளக்காதலை விடவில்லை.ஆத்திரமடைந்த முரளி, சேதுவை கொலை செய்ய திட்டமிட்டு, தன் நண்பர்களான சந்துாரை சேர்ந்த நவீன், 23, பட்டகப்பட்டி தங்கராஜ், 37, ஆகியோருடன் சேர்ந்து கடந்த, 15ல் சேதுவை மது அருந்த அழைத்துஉள்ளார்.அங்கு வந்த சேதுவை, 'மாருதி ஸ்விப்ட்' காரில் அழைத்துக் கொண்டு, அத்திகானுாரில் உள்ள மாந்தோப்பிற்கு சென்று, மூவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதில், சேது உயிரிழந்தார்.புகார்சேது உடலை, ஜெகதேவியிலிருந்து பர்கூர் செல்லும் சாலையில், ஜி.நாகமங்கலத்திலுள்ள மாந்தோப்பில் நீரில்லாத, 20 அடி ஆழ கிணற்றில் புதைத்து உள்ளனர்.சேதுவின் மொபைல்போனை, அவ்வழியாக சென்ற கிரானைட் லாரியில் வீசியுள்ளனர்.கணவரை காணவில்லை என, சேதுவின் மனைவி மோனிகா கடந்த, 17ல் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்ததில், முரளி, நவீன், தங்கராஜ் ஆகியோர், சேதுவுடன் கடைசியாக பேசியது தெரிந்தது.அவர்களை பிடித்து, விசாரித்ததில், சேதுவை அவர்கள் கொன்றது தெரியவந்தது. அதன்படி மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை