உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநில செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொரு-ளாளர் செந்தில் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். வட்ட கிளை செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்-டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தினக்கூலி மற்றும் ஒப்-பந்த பணியாளர்களை வரன்முறை செய்ய வேண்டும். கருணை அடிப்படையில், பணி நிய-மனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்-முறை செய்ய வேண்டும். கூட்டு மன்றத்தை கூட்டி, 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 8வது ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்-களை எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக, 2026 ஜன., 6 முதல் காலவ-ரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்