| ADDED : பிப் 25, 2024 04:14 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சென்றாயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40; இவர், அரசு பஸ் டிப்போவில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் தன்னுடன் அரசு பணிமனையில் பணியாற்றி வந்த நண்பர் தங்கராஜ், 40, என்பவருடன் கிருஷ்ணமூர்த்தி, தன் ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் வெப்பாலம்பட்டி பகுதியில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி, ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது, எதிரில் வந்த ஊத்தங்கரை தனியார் மகளிர் கல்லுாரி பஸ், அவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.இதில் பஸ் டயரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தியின் தலை நசுங்கி பலியானார். தங்கராஜ் படுகாயமடைந்தார். அவர் புகார் படி போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.