உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் பயணிகள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்-பாட்டம்

ஓசூர் பயணிகள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்-பாட்டம்

ஓசூர்:' ஓசூர், பயணிகள் மேம்பாட்டு சங்கம் சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன், நேற்று மாலை ஆர்ப்-பாட்டம் நடந்தது. செயலாளர் முத்துராமன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்.,- எம்.பி., கோபிநாத், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், அனைத்து குடியி-ருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் நீல-கண்டன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்-வூதியர் சங்க மாவட்ட தலைவர் துரை உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை, தினசரி ரயிலாக இயக்க வேண்டும். பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், சிலிப்பர் பெட்டிகளை தற்-போது உள்ளது போல், 11 பெட்டிகளை குறைக்-காமல் இயக்க வேண்டும்.கொரோனா காலத்திற்கு பின், பங்காருபேட்டை வழியாக திருப்பி விடப்பட்ட கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலை, ஓசூர் வழியாக மீண்டும் இயக்க வேண்டும். யஷ்வந்த்பூர் - ஓசூர் பயணிகள் ரயிலை, 16 பெட்டிகளாக உயர்த்தி இயக்க வேண்டும். ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டத்தை விரைந்து ஆரம்பிக்க வேண்டும். பெங்களூரு - திருச்சி இடையே, ஓசூர் வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர். கவுன்சிலர் இந்திராணி, ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் பிரபாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை