உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 3ல் வினாடிக்கு, 649 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. கடந்த, 10 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த, இரு நாட்களாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, 871 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 100 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை, 600 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.இதனால் நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 228 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை, 452 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு, 395 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றிலும், இடது மற்றும் வலது புற வாய்க்காலில், 12 கன அடியும் என மொத்தம், 407 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 43.55 அடியாக நீர்மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை