உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சூளகிரியில் கோடைக்கு முன் அதிகரித்த குடிநீர் தட்டுப்பாடு

சூளகிரியில் கோடைக்கு முன் அதிகரித்த குடிநீர் தட்டுப்பாடு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை, 40 சதவீதம் கூட பெய்யவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சூளகிரி, ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏரிகள் நீரின்றி வறண்டு வருகின்றன. சூளகிரி சுற்றுவட்டாரத்தில் தற்போதே குடிநீர் தட்டுப்பாடு துவங்கி விட்டது. இந்நிலையில் கடந்த, 2019 ல், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், சூளகிரி துரை ஏரியில் கட்டப்பட்ட குடிநீர் கிணறு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து, சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை