உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி கர்நாடக மாநில தேர்தல் அலுவலர் ஆய்வு

ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி கர்நாடக மாநில தேர்தல் அலுவலர் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு, 4-வது காலாண்டு ஆய்வு, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்-குமார் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்-பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி-லையில், நேற்று மாலை நடந்தது.தொடர்ந்து, கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்க-ளிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்-தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, 4,658 பேலட் யூனிட், 3,092 கன்ட்ரோல் யூனிட் மற்றும், 3,025 விவி பேட் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி பெங்களூரு, பாரத் எலக்ட்-ரானிக்ஸ் நிறுவனத்தின், 9 பொறியாளர்களை கொண்டு இன்று (நேற்று) தொடங்கியது. இதில், வெப் காஸ்டிங், மெட்டல் டிடெக்டர் பொருத்-துதல், சானிடைசிங் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முதல்நிலை சரிபார்ப்பு பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில இணை தலைமை தேர்தல் அலுவலரும், மின்னணு மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலருமான ராகவேந்திரா, முதல்நிலை சரிபார்ப்பு பணியின் முன்னேற்பாடு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதல்நிலை சரிபார்ப்பு பணி முடியும் வரை, அரசியல் கட்சியினர் தினமும் காலை, 9:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை உடனிருந்து கண்காணித்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்நிலை சரிபார்ப்பு பணியில் கண்டறியப்-படும் பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெங்-களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்-படும். இவ்வாறு, அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தேர்தல் தாசில்தார் சம்பத், தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், விஜய-குமார், கிருஷ்ணகிரி தாசில்தார் ரமேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ