உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உதவித்தொகை பெற ரேஷன் கார்டில் திருத்தம் கி.கிரி மாவட்டத்தில் திணறும் வி.ஏ.ஓ.,க்கள்

உதவித்தொகை பெற ரேஷன் கார்டில் திருத்தம் கி.கிரி மாவட்டத்தில் திணறும் வி.ஏ.ஓ.,க்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதரவற்றோர் உதவித்தொகை பெற அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்களில் நடந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்தவர்கள் இடை தரகர்கள் மூலம் ரேஷன் கார்டு ஜெராக்ஸில் வயதை திருத்தி விண்ணப்பித்துள்ளதால் பயனாளிகளை தேர்வு செய்ய முடியாமல் வி.ஏ.ஓ.,க்கள் திண்டாடி வருகின்றனர்.ஆதரவற்றோர் உதவித்தொகை மாதம் 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உய்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதவற்ற கூலி உதவித்தொகை பெற கலெக்டர் அலுவலகத்தில் அதிக அளவு விண்ணப்பங்கள் வந்தது.கலெக்டர் மகேஸ்வரன் கிராம பகுதியில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து மனுக்களை அளிப்பதை தவிர்க்க கடந்த ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்களில் மனுக்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்தினார்.இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதியான எவரும் உதவித்தொகை பெற முடியாமல் தடுக்கப்படும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்தது.முகாமில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உதவித்தொகை வேண்டி 300க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தது. மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளும் பணி கடந்த 8ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இதன்படி அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆர்.ஐ., கேடரில் உள்ள உதவியாளர் ஒருவர் ஆதரவற்ற உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்கள் வீட்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.ஆதரவற்ற கூலி உதவித்தொகையை பெற முக்கிய தகுதியாக வயது உள்ளது. அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் வருமானம் ஏதும் இல்லாமலும், விவசாய கூலியாக இருக்க வேண்டும் போன்ற தகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளது.கடந்த 2005ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. இதன்படி ரேஷன்கார்டில் 55 வயது மற்றும் அதற்கு மேல் இருப்பவர்கள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.ஆனால், பல இடங்களில் ரேஷன் கார்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ஜெராக்ஸ்சில் வயதை திருத்தி அதாவது 55 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதை ஸ்டிக்டர் ஒட்டி திருத்தி அதனை மீண்டும் ஜெராக்ஸ் எடுத்து விண்ணப்பத்துடன் அதனை இணைத்து வழங்கியுள்ளனர்.களப்பணிக்கு சென்ற வி.ஏ.ஓ.,க்கள் ஒரிஜனல் ரேஷன் கார்டில் ஒரு வயதும், ஜெராக்ஸ் காப்பியில் ஒரு வயதும் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் பெரியமுத்தூர் தரப்பில் உதவித்தொகை பெற வழங்கப்பட்ட 90 சதவீத விண்ணப்பங்களில் இது போன்ற முறைகேடு நடந்துள்ளது கள ஆய்வில் தெரிந்தது.வயதை காரணம் காட்டி இந்த மனுக்களை வி.ஏ.ஓ.,க்கள் நிராகரிக்க முற்படும்போது அந்தந்த பகுதி அரசியல் வாதிகள் சிபாரிசுக்கு வந்து அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். இதனால் முறையானவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ