மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
19 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
19 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
19 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
19 hour(s) ago
ஓசூர்:ஓசூர் நகர சாலைகளில் கால்நடைகள் தாராளமாக உலா வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.ஓசூர் டவுன் பகுதியில் நான்கு வழிச்சாலையை தவிர மற்ற நகர சாலைகள் அனைத்தும் குறுகலாக அமைந்துள்ளன. இச்சாலைகளில் சமீப காலமாக கால்நடைகள் படுத்து ஓய்வெடுப்பதும், சாலைகளில் உலா வருவதும் அதிகரித்து வருகிறது.ஓசூர் பகுதியில் தொழிற்ப்பேட்டை தொழில்களுக்கு மத்தியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால், ஓசூரை சேர்ந்த விவசாயிகள் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.குறிப்பாக பால் உற்பத்தியை நம்பி பிழைப்பு நடத்தி வரும் குடும்பத்தினர், பசுமாடுகள், எருமை மாடுகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் கால்நடைகளை பொறுப்பில்லாமல் தினம் சாலையில் கட்டவிழ்த்து விட்டு விடுகின்றனர்.கால்நடைகளில் நகரை சுற்றியுள்ள விவசாய பகுதிகளில் மேய்ந்துவிட்டு, மதியம், மாலை நேரத்தில் ஓய்வெடுப்பதற்காக டவுன் பகுதியில் நுழைந்து விடுகிறது. சாலைகளில் குறுக்கு, நெடுக்காகவும் கால்நடைகள் உலா வருவதோடு நகராட்சி அலுவலகம், பாகலூர் சர்க்கிள் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் ராயக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் படுத்து ஓய்வெடுக்கின்றன.நகர சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு வாகன விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. நகர சாலைகளில் உலாவும் கால்நடைகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், கால்நடை உரிமையாளர்கள் தாராளமாக கால்நடைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். மாலை நேரத்தில் பால் கறப்பதற்காக மட்டும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் தேடி வருகின்றனர்.இரவு வீட்டில் கால்நடைகளை கட்டி போடும் கால்நடை வளர்ப்போர் மறுநாள் காலையில் கால் கறந்து முடிந்ததும் மீண்டும் அவற்றை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். நகர சாலைகளில் கால்நடைகள் அட்டகாசத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago