சங்கடஹர சதுர்த்தியில்பக்தர்கள் வழிபாடுகிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன. இதேபோல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.30 'சிசிடிவி' கேமராக்கள்அரூர் நகரில் பொருத்தம்அரூர்-தர்மபுரி மாவட்டம், அரூரில், டாஸ்மாக் கடை, பஸ் ஸ்டாண்ட், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில், மொபைல் போன், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. மேலும், சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அதிகளவில் அடிமையாகி, குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவமும் நடக்கிறது. எனவே, அரூரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காணவும், முக்கிய சாலைகள், தெருக்கள், கடைவீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், டவுன் பஞ்., சார்பில், 43 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 இடங்களில், 130 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி, கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கியது. தற்போது, 117 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும், 13 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.