உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளர் தினத்தில் விடுமுறை வழங்காத 55 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

தொழிலாளர் தினத்தில் விடுமுறை வழங்காத 55 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

கிருஷ்ணகிரி : தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத, 55 நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிலாளர் தினமான நேற்று, சட்ட விதிகளின்படி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தலைமையில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 46 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் மற்றும் 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 89 நிறுவனங்களில், சட்ட விதிமுறைகளை பின்பற்றாத, 25 கடைகள், நிறுவனங்கள், 26 உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 4 என மொத்தம், 55 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ