உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மகனை கொன்ற வழக்கில் ஜாமினில் வந்தவர் தற்கொலை

மகனை கொன்ற வழக்கில் ஜாமினில் வந்தவர் தற்கொலை

ஓசூர் : சூளகிரி அடுத்த செம்பரசனப்பள்ளி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 35. டெய்லர்; இவர் மனைவி சுகன்யா. இவர்களுக்கு, கதிர்செல்வன், 5, என்ற மகன் இருந்தார். கடந்த, 2022 ஜூன், 9ல் வீட்டிலிருந்து மாயமாகி, அடுத்த நாள் காலையில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சுகன்யா சடலமாக கிடந்தார். அதன்பின் தன் மகன் கதிர்செல்வத்தை, தந்தை சந்தோஷ் வளர்த்து வந்தார்.கடந்தாண்டு டிச., 8ல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சந்தோஷ், மகன் கதிர்செல்வத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இவ்வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சந்தோஷ் கடந்த, 13ல் ஜாமினில் வெளியே வந்தார்.கடந்த, 14 முதல், நேற்று முன்தினம் வரை சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில் தினமும் காலை, மாலை நேரத்தில் கையெழுத்திட்டு வந்தார். கடும் மனஉளைச்சலில் இருந்த அவர், நேற்று மதியம் வீட்டின் முன் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி