உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழிவறை வசதியற்ற மத்துார் அரசு பள்ளி

கழிவறை வசதியற்ற மத்துார் அரசு பள்ளி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரில், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் சிலர், பள்ளி வளாகத்திலிருந்து கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையை கடந்து, பள்ளி எதிரிலுள்ள ஏரிக்கு இயற்கை உபாதையை கழிக்க செல்கின்றனர். இச்சாலையில் நாள் ஒன்றுக்கு, 200க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் நிலையில், மாணவர்கள் சாலையை கடந்து சென்று வருவது, பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சம்மந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ