உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மொகரம் திருவிழா துவக்கம்

மொகரம் திருவிழா துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளாப்பள்ளி பஞ்., தின்னக்கழனி கிராமத்தில் அமைந்துள்ள ஜச்சா பீ தர்காவில், 18ம் ஆண்டு மொகரம் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, சந்தனக்குடம் மற்றும் கொடியை ஊர்வலமாக கொண்டு சென்று, தர்காவில் கொடிக்கு சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் பூசி, வண்ண மலர்களால் அலங்கரித்தனர். பின்னர், மதகுருமார்கள் முன்னிலையில் மரத்தில் கொடியேற்றப்பட்டது. இத்திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று, அனைத்து சமுதாய மக்களும் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ