மேலும் செய்திகள்
தலைநகர் பகுதியில் 243 பறவையினங்கள்
23-Feb-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த, 2ம் கட்ட பறவைகள் கணக்-கெடுப்பில், 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்டறியப்-பட்டு பதிவு செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கெலவரப்பள்ளி அணை, கே.ஆர்.பி., அணை உட்பட மொத்தம், 40 நீர்நிலைகளில் கடந்த, 8 மற்றும் 9ல், முதற்கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டன. 2ம் கட்டமாக ஒருங்கிணைந்த நிலப்பரப்புகளில் கடந்த, 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்-ளப்பட்டது.இதில், 30க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், பணியாளர்கள், 70க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவ, மாண-வியர் மற்றும் பறவைகள் பற்றி முன் அனுபவமுள்ள நபர்கள் ஈடு-பட்டனர். வாட்ஸாப் சமூக வலைதளம் மூலம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு வழி நடத்தப்பட்டனர்.தொலைநோக்கு கருவி, கேமரா உட்பட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, கருந்தலை மாம்பழ குருவி, நீலத்தொண்டை ஈ பிடிப்பான், பருந்துகள், செந்தலை பஞ்சுருட்டான், மீன் கொத்-திகள், காட்டுப்பக்கி குருவி, ஆந்தைகள், கழுகுகள், அரசவால் ஈ பிடிப்பான், தேன்சிட்டு, கதிர் குருவி, புள்ளி ஆந்தை, வல்லுாறு, ஊதா பிட்டு தேன் சிட்டு, கல்லுக்குருவி, கள்ளி புறா, காட்டு பக்கி, ஜெர்டன் புதர் வானம்பாடி, கருஞ்சிட்டு, குக்குறுவான், மாம்பழ சிட்டு, செம்பழுப்பு முதுகு கீச்சான், குடுமி கழுகு உட்-பட, 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அடையாளம் கண்டு உரிய படிவத்தில் பதிவு செய்யப்பட்டன.கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் சான்றிதழ்களை வழங்கினார்.
23-Feb-2025