உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புத்தாண்டு - 2026 பிறப்பையொட்டி ஓசூர் ஸ்ரீதன்வந்திரி பகவான் திருக்கோவிலில் சிறப்பு யாகம், பூஜை

புத்தாண்டு - 2026 பிறப்பையொட்டி ஓசூர் ஸ்ரீதன்வந்திரி பகவான் திருக்கோவிலில் சிறப்பு யாகம், பூஜை

மஹா விஷ்ணுவின் அவதாரமும், வைத்திய சாஸ்திரத்தின் ஆஸ்தான தேவனுமான ஸ்ரீ தன்-வந்திரி மூர்த்திக்கு, நாட்டில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டும் தான் கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்-லுாரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீதன்வந்திரி பகவான் பிரதான தனிக்கோவில் ஆகும். இங்-குள்ள மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவான், சங்கு, சக்-கரம், ஜளுகம், அமிருதகலசமுமாக சாதுர்பாரூப-மாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் மக்கள் நினைத்த காரியம் நிறைவேறும், நோய் நொடியின்றி வாழலாம். இங்குள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால் ஆனந்தமும், அனுக்கிர-கங்களும் அள்ளி கொடுக்கிறார்.இக்கோவில் வளாகத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நாகர் சன்னதி, சிவ-லிங்கம் மற்றும் நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் தலைமை தந்திரி ஸ்ரீ நாராயண நம்பூதிரி தலை-மையில், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் நடக்கி-றது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டால், நோய் தீருவதுடன், நீண்ட ஆயுள் பெற்று வளமாக வாழலாம். இக்கோவிலில் பக்-தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தி, தன்னுடைய உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்களை, பகவா-னுக்கு சமர்ப்பணம் செய்து சுத்தம் பெறலாம்.குழந்தைகள் தொடர்ந்து வழிபட புத்தி கூர்மை அதிகரித்து, படிப்பில் ஆர்வம் காட்ட துவங்குவர். மன சஞ்சலம் உள்ளவர்கள், தொடர்ந்து இங்குள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால், மனம் துாய்மை பெறும். தன்வந்திரி பகவானை தொடர்ந்து வழிபட நாள்பட்ட நோய் கூட குண-மாகி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்க-ளுக்கு செல்வங்கள், மனநிம்மதி, குழந்தை பாக்-கியம், உடல் ஆரோக்கியம் வழங்கும், இந்த அருள்மிகு ஸ்ரீ தன்வந்திரி பகவான் கோவிலில் நாளை (ஜன., 1) ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடக்கிறது.காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்-பட்டு, தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜை, அபி ஷேக, அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு ஹோமங்கள் நடக்கின்றன. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், நாகர் சன்னதி, சிவ-லிங்கம் மற்றும் நவக்கிரகம் ஆகிய சன்னதிக-ளிலும் தனித்தனியாக பூஜை நடக்க உள்ளது. பக்-தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய, சிறப்பு ஏற்பா-டுகள் செய்யப்பட்டுள்ளன. அன்னதானமும் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, அதியமான் கல்வி குழும நிறுவன தலைவர் தம்பிதுரை எம்.பி., தலைவர் பானுமதி தம்பிதுரை, அறங்காவலர்கள் லாசியா தம்பிதுரை, நம்ரதா தம்பிதுரை, தன்வந்திரி கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, பொறியாளர் சரவணன், மேலாளர் நாராயணன் மற்றும் நிர்-வாகிகள் செய்துள்ளனர்.கோவில் நடை திறப்பு நேரம்: தினமும் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மூலவரான அருள்மிகு ஸ்ரீதன்வந்திரி சுவாமிக்கு காலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8:00 மணிக்கு உஷ பூஜை, 11:00 மணிக்கு மதிய பூஜை செய்யப்பட்டு நண்பகல், 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்-படும். மாலை, 4:00 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, 6:30 மணிக்கு மகா தீபாரா-தனை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 8:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.தன்வந்திரிபகவானுக்கான பூஜைதன்வந்திரி பகவானுக்கு புஷ்பாஞ்சலி, ஐக்ய-மாத்யஸூக்தம் புஞ்பாஞ்சலி, ஆயுர்சூக்தா புஷ்-பாஞ்சலி, பாக்ய சூக்தா புஷ்பாஞ்சலி, சோரூனு, எண்ணெய் அபிஷேகம், எண்ணெய் விளக்கு, துளசி மாலை, நெய் விளக்கு, பால் அபிஷேகம், பால் பாயசம், புருஷா சூக்த புஷ்பாஞ்சலி, சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலி ஆகிய பூஜைகள் நடக்கின்றன. பக்தர்களும் தங்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து அருள் பெறலாம். காலையில் மட்டும், சர்க்கரை வெண்ணெய் நைவேத்தியம், மென்மையான தேங்காய் அபிஷேகம் செய்-யலாம். இக்கோவிலில், தன்வந்திரி மந்திரச்சன ரோக சமணம் வழிபாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை