| ADDED : டிச 27, 2025 05:39 AM
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கால்நடை பண்ணை வளாகத்தில் உள்ள கோழியின உற்-பத்தி மற்றும் மேலாண்மை கல்லுாரியில், வெறிநோய் (ரேபீஸ்) தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் திருவேங்கடன் தலைமை வகித்தார். உதவி போராசிரியர் மகேஸ்வரி வர-வேற்றார். ஓசூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜோதிபாஸ், வெறிநோயின் பொது சுகாதார முக்கியத்துவம், அதன் தொற்று தன்மை, பரவும் வழிகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க தக்க நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் அவசியம் குறித்து எடுத்து-ரைத்தார். மேலும், வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான நடைமுறை அம்சங்க-ளையும் விளக்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருந்தியல் துறை உதவி பேராசிரியர் அர்ச்சனா, மனிதர்கள், விலங்குகளுக்கு வெறிநோயை கட்-டுப்படுத்த ஆரம்ப நிலையிலேயே நோயை கண்-டறிதல், சரியான நோய் மேலாண்மை மற்றும் தடுப்பூசி நடைமுறைகளை பின்பற்றுவதின் முக்-கியத்துவம் குறித்து விளக்கினார். மாணவ, மாண-வியர் பங்கேற்றனர். கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லுாரி பேராசிரியர் சம்சுதீன் நன்றி கூறினார்.