உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் 100 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் 100 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் போடப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை, நீதிமன்ற சாலை, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதான சாலை உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில், பல கடைகள், சாலையை ஆக்கிரமித்தும், தள்ளுவண்டி கடைகள் அமைத்தும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன. இது குறித்து பஞ்., நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அளித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.இந்நிலையில் ,பஞ்., தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் தலைமையில், நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ., ரமேஷ் மற்றும் பணியாளர்கள், இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்பட, 100க்கும் மேற்பட்ட கடைகள், சாலையை மறைத்து வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை பொக்லைன் மூலம் அகற்றினர்.பஞ்., துணைத்தலைவர் செல்வி பாஸ்கர் மற்றும் பஞ்., உறுப்பினர்கள் உடனிருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை