உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  அரசு நிலத்தின் மண் கடத்தல் வருவாய் துறையினர் கப்சிப்

 அரசு நிலத்தின் மண் கடத்தல் வருவாய் துறையினர் கப்சிப்

சூளகிரி: சூளகிரி அருகே, அரசு நிலத்தின் மண் கடத்தல் தொடர் கதையாக உள்ள போதும், வருவாய் துறையினர் கண்டுகொள்ளவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, தியாகரசனப்பள்ளி அருகே, 12 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரிய கற்களை உடைத்து விட்டு, அதிலிருந்து கிட்டத்தட்ட, 1,500 லோடுகள் வரை மண்ணை வெட்டி எடுத்து, லாரிகளில் கடத்தியுள்ளனர். பொக்லைன், ஹிட்டாச்சி மூலம், தொடர்ந்து மண் கொள்ளை நடந்த போதும், வருவாய்த்துறை கண்டுகொள்ளவில்லை. அப்பகுதி மக்கள் தியாகரசனப்பள்ளி வி.ஏ.ஓ., மற்றும் சூளகிரி தாசில்தார் வரை புகார் செய்தும், இதுவரை மண் கடத்திய கும்பல் மீது போலீசில் புகார் செய்யவில்லை. அரசுக்கு சொந்தமான நிலத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நொரம்பு மண் கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து, கலெக்டர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூளகிரி தாசில்தார் ரமேஷ்பாபு கூறுகையில், ' 'நான் புதிதாக பொறுப்பேற்றுள்ளேன். எனக்கு எந்த தகவலும் வரவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், ' ' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை