உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்தது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்-தினம், 538 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 386 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து கடந்த, 14 முதல், 13 நாட்களாக தினமும், 772 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. நேற்று நீர்வ-ரத்து சரிந்ததால், அணையில் இருந்து, 493 கன அடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 47.25 அடி-யாக நீர்மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை