உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தைப்பூச திருவிழா முருகன் தேர்பவனி

தைப்பூச திருவிழா முருகன் தேர்பவனி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், 87ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த, 19ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மயில் வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் சுவாமி நகர் வலம் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம் தைப்பூசத் திருவிழாவையொட்டி, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. தேரில் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத முருகர் கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலைகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள், தங்கள் குறைகளைப் போக்க உப்பு, மிளகு போன்றவற்றை தேர்மீது துாவி வேண்டுதல் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ